காலம் அதியசித்து நிற்கும் மகத்தான பத்து உலக திரைப்படங்களுள் ஒன்றாக இன்றளவும் விமர்சகர்களால் தொடர்ந்து கணிக்கப்பட்டு வரும் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ தன் ஐம்பது வருடங்களைக் கடந்து அடுத்த நூற்றாண்டை நோக்கி புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைக்கிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பெரும் துயரத்தில் சிக்கி, பிளவுபட்ட மனநிலையிலிருந்த ஐரோப்பாவை அதன் அவலத்திலிருந்து மீள்கொணரும் முயற்சிகளுள் ஒன்றாக இத்திரைப்படம் விமர்சகர்களால் கருதப்படுகிறது.
1902ல் ஜூலை 7ல் ரோமிலிருக்கும் சோவா நகரில் பிறந்த இதன் இயக்குநர் விட்டோரியா டி சிகாவுக்கு இது மூன்றாவது திரைப்படம். இதுதான் இவரை உலக இயக்குநராக அடையாளம் காண்பித்தது புத்தெழுச்சிமிக்க தன் கலை வாழ்க்கையில் சமரசம் என்ற வார்த்தைக்கே இடமளிக்காத டி சிகா திரைப்படத்தை இன்னொரு மாகலைஞரான சார்லி சாப்ளினுக்கு தன் வாழ்நாளின் கடப்பாடு எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
Be the first to rate this book.