பைபிள் ஒரு நூல் அல்ல. அது பல நூல்களின் தொகுப்பு. புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு, இணை திருமறை நூல்கள் என மொத்தம் எழுபத்தைந்து நூல்களின் தொகுப்பு. நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் எழுதிய நூல்கள் பைபிளில் இடம்பெற்றுள்ளன!
பைபிளில் உள்ள ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. இலக்கிய அழகிலும், கவித்துவ வியப்பிலும், கதை சொல்லும் பாணியிலும், ஆன்மிக போதனைகளிலும், வரலாற்றுப் பின்னணியிலும் அவை தனித்துவம் பெறுகின்றன. ஆனாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது அவை மீட்பின் செய்தியை துவக்கம் முதல் முடிவு வரை இழையோட விட்டிருப்பதைக் காணலாம். இது, கடவுள் மனிதனுக்காய் எழுதிய காதல் கடிதம்.
தினத்தந்தியில் தொடராக வந்து பல இலட்சம் மக்களைச் சென்றடைந்த இந்தப் படைப்பு பைபிளில் உள்ள ஒவ்வொரு நூலையும் தனித்தனியே எடுத்து அதன் வரலாற்று, இலக்கிய, ஆன்மிக பின்னணியை விளக்குகிறது! பைபிளைப் படிக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்!
Be the first to rate this book.