இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல்.இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சி யெமச்செட்டா உணர்வுப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். நெருடும் நைஜீரியப் பெயர்களைத் தவிர்த்து நாவலெங்கும் நமக்கு அன்னியமாக எதையும் உணர முடியவில்லை. இரா. நடராசனின் ஆற்றொழுக்கான மொழிநடை வாசகனுக்கு மிக நெருக்கமாக இருந்து நாவலைச் சரளமாக நகர்த்திச் செல்கிறது.
Be the first to rate this book.