நாம் வாழும் இந்த பூமி, எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நிலையாக ஓர் இடத்தில் இருப்பதுபோல் நாம் உணரக்கூடிய இந்த பூமி, உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இல்லை; சுற்றிக்கொண்டே இருக்கிறது. இது பூமி கிரகத்தைப் பற்றிய விஷயம். இந்த பூமியும்கூட, நிலம், நீர் என்று பிரிந்துள்ளது. நீர்ப்பரப்புக்கு அடியில்கூட நில மட்டம் இருக்கிறது. இந்த நிலமட்டத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்களும் பூமியின் அடிப்பகுதியை மையமாக வைத்தே ஏற்படுகின்றன. இப்போதெல்லாம் திடீரென்று சில இடங்களில் கடல் மட்டம் உயர்கிறது என்கிறார்கள். ஆனால் உண்மையில் கடல் மட்டம் உயரவில்லை; கடல்நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலப் பகுதியே உயர்கிறது.... அதுவே கடல் மட்டம் உயர்வதாக நமக்கு ஒரு தோற்றத்தைத் தருகிறது என்கிறார் நூலாசிரியர் க.பொன்முடி. கடல் நீர் சூழ்ந்துள்ள நிலம், அதாவது கண்டங்கள்தான் உயர்கின்றன என்பதற்கு சில ஆதாரங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் நூலாசிரியர்.
Be the first to rate this book.