வகுப்பறையில் எல்லோருடனும் சேராமல் ஒரு மூலையில்தான் நான் உட்கார்ந்திருக்க வேண்டுமா, ஏன்?
குடிநீர்க் குழாயில் எல்லா மாணவர்களையும் போல நான் நீர் அருந்தக் கூடாதா, ஏன்?
ஆசிரியர்கள் என் புத்தகங்களைத் தொடுவதே இல்லையே, ஏன்?
தீண்டாமை என்ற அரக்கன் துரத்த துரத்த, 'ஏன் ஏன்' என்ற கேள்விகள் சிறுவன் பீமின் தலைக்குள் இடைவிடாமல் ஒழித்துக்கொண்டேயிருந்தன. பெரியவனா ஆன பிறகும் அப்படித்தான். சமத்துவத்துக்காகத் தன் வாழ்க்கை முழுவதும் பீம்ராவ் அம்பேத்கர் நடத்திய போராட்டத்துக்கு அந்தக் கேள்விகள்தான் அடிப்படை. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அவர் இருந்தபோது அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் அற்புதமான கருத்துகளுக்கு அந்தக் கேள்விகள்தான் அடிப்படை.
'ஏன் என்று கெட்ட சிறுவன்' புத்தகம், 'பாபாசாஹேப்' பீம்ராவ் அம்பேத்கர் என்ற மாமனிதரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. தனது பேச்சுகளாலும் எழுத்துகளாலும் சாதி வெறியை எதிர்த்துத் தீவிரமாகப் போராடியவர் அம்பேத்கர். ஸாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும்படி தலித் மக்களைத் தூண்டியவர் அம்பேத்கர். அந்தப் போராட்டம் இன்றும்கூட தொடர்கிறது. எளிமையான கதை, வித்தியாசமான ஓவியங்கள் அம்பேத்கர் என்ற மாமனிதரின் வாழ்க்கையைக் குழந்தைகளின் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றன. இக்கதை சாதிப் பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் ஒவ்வொருவரும் தாங்களாகவே 'ஏன், ஏன்' என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளவும் உதவும்.
Be the first to rate this book.