தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகுந்த பிரதியாகக் ‘கனவு’ இருக்க, தமிழ் இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை மைல்கல்லாக விளங்குகிறது ‘சின்னச் சங்கரன் கதை’. பாரதியியலுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு கிளாசிக் வரிசைக்கு இவ்விரு பிரதிகளையும் தொகுத்தளித்து விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார்.
Be the first to rate this book.