சுதந்திரத்தையே மூச்சாகக் கொண்டு, கடைசி வரை அந்த மூச்சுக்காற்றை வலுவுள்ளதாக்கி வாழ்ந்தவர் மகாகவி பாரதி. இலக்கியத்தில் சிகரமாகத் திகழ்ந்தவர். எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருந்த அவருடைய நட்பு வட்டமும் மிகச் சிறந்ததாக அமைந்திருந்தது. அவர்களுடனான பாரதியின் நட்பு, நாட்டுக்கு நன்மை செய்தது; சோர்ந்து கிடந்த மக்களுக்கு மிகப் பெரும் உத்வேகத்தை அளித்தது. இப்படி, அறிஞர்கள், கவிஞர்கள், இசைக் குயில்கள், ஆன்மிக அருளாளர்கள் போன்றோருடன் பாரதி கொண்டிருந்த நெருக்கத்தால், பாரதியின் மற்றொரு பரிமாணம் எப்படி இருந்தது என்பதை, நாம் இந்த நூலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். பாரதியின் கண்ணோட்டத்தில் உத்தமர்களைப் பார்ப்பது நம் கண்ணுக்கு விருந்து, எண்ணத்துக்கு உரம். பாரதி இந்தக் கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தைப் பார்த்து வெளிப்படுத்தியுள்ளார்... என்பதை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ள பாங்கு, பாரதியின் மற்றொரு பரிமாணத்தை நாம் எளிதாக உணரும்படி செய்கிறது.
Be the first to rate this book.