பாரதியின் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் காரணமாய் அமைவது அவருடைய பன்மொழிப் புலமை ஆகும். அவருடைய பன்மொழிப் புலமைக்குக் காரணம் அவர் சிறுவயதில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தமையே ஆகும். எட்டயபுரத்திலிருந்து காசிக்கும் பின்னர்க் கல்கத்தா, சென்னை, புதுச்சேரி எனப் பன்மொழிச் சூழலில் வாழ்ந்தமை அவருடைய பன்மொழி அறிவை மேம்படுத்தியது. அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். இதனை,
“எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கம் உண்டு இவற்றிலே தமிழைப் போல வலிமையும், திறமையும், உள்ளத்தொடர்பும் உடைய பாஷை வேறொன்றும் இல்லை
Be the first to rate this book.