‘அறிவதற்காகக் கற்றல்’, ‘செயலாற்றுவதற்காகக் கற்றல்’, ‘பிறரோடு சேர்ந்து வாழக் கற்றல்’, ‘சுய ஆளுமையுடன் வாழக் கற்றல்’ ஆகியவை கல்வியின் நான்கு தூண்களாக யுனெஸ்கோ முன்மொழிந்த அம்சங்கள் இவை. தன் காலத்தின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் குறித்துச் சிந்தித்தவரான மகாகவி பாரதி கல்விச் சிந்தனைகளிலும் தனித்தே உயர்ந்து நிற்கிறார். மேற்கண்ட நான்கு அம்சங்களும் பாரதியின் எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன.
48 துணைத் தலைப்புக்களில், பாரதியின் கட்டுரைகள், கவிதைகளில் பிற படைப்புகளில் இருந்து கல்வி குறித்த சிந்தனைகள் மிகச் செறிவாகத் தொகுத்தளித்திருக்கிறார்.
Be the first to rate this book.