“பாரதியின் வார்த்தைகள் இல. கணேசனின் குரல்வளையாக, ராம. கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”
“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.
இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,
‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்
கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’
என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.
சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?
“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் –‘ஜகத்குரு’– லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள் மார்க்சிய பாரதியவாதிகள்.”
Be the first to rate this book.