இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதியாரை அடுத்த பெருங்கவிஞராகத் திகழ்பவர் பாரதிதாசன். கருத்து நிலைகளால் 'புரட்சிக்கவிஞர்' என அழைக்கப்பெறும் அவர் கவிதை வடிவங்களின் யாப்பு வடிவங்களின்& ஆட்சித் திறத்தால் 'பாவேந்தர்' எனப் போற்றப்பெறுகின்றார். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிரபந்த இலக்கியம் முதலியவற்றிலெல்லாம் பயிற்சிமிக்க பாரதிதாசன் காலந்தோறும் தமிழில் தோன்றிய இலக்கியங்களில் பயிலும் யாப்பு வடிவங்கள் பெரும்பாலானவற்றில் தமது படைப்புகளை எழுதியுள்ளார். பல புதிய வடிவங்களையும் யாப்பு நெறிநின்று படைத்துள்ளார். யாப்பின் கூறாகிய தொடைநலன்களின் செழுமையையும் தம் படைப்பின் வளத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். பா, பாவினம், இனவினம் எனத் தமிழ் யாப்பு வடிவங்கள் பலவற்றிலும் பாரதிதாசன் காட்டிய ஆளுமையை, அவர்தம் யாப்பியல் தனித்திறனை இந்நூல் விரிவாக ஆராய்ந்து விளக்குகின்றது.
பாரதிதாசன் படைப்புகள் அனைத்தையும் களனாகக் கொண்டுள்ள இந்த யாப்பியல் ஆய்வு நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்க் கவிதை வரலாற்றில் தமிழ் யாப்பியல்& வரலாற்றில்& பாரதிதாசனின் தனித்த ஆளுமையை, இடத்தை இனங்கண்டு காட்டுகின்றது. பாரதிதாசன் யாப்பியலை மட்டுமன்றித் தமிழ் யாப்பு வடிவங்களின் இலக்கண அமைப்பினையும், தனித்தன்மையையும் அறிந்துகொள்ளவும் இந்நூல் கையேடாக விளங்குகின்றது.
Be the first to rate this book.