சந்தேகமில்லாமல் ஒரு புரட்சியாளர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தைத் தனது கவிதைகள் மூலம் எழுப்பி, விழிப்பூட்டினார் பாரதிதாசன். தமிழை ஒரு மொழியாக அல்ல, வலிமையான ஆயுதமாக உருமாற்றிக்காட்டினார். பெண் விடுதலை, சமூக விடுதலை, தேச விடுதலை என அவர் எழுதிய ஒவ்வொரு கவிதையும் மக்களிடத்தில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. திராவிடம், தமிழ்ப்பற்று, பெரியாரியம், பொதுவுடைமை மட்டுமில்லாமல், தமிழரின் காதலையும் வீரத்தையும் பேசிய அற்புதமான சொற்களுக்குச் சொந்தக்காரர்.
நிரந்தர நாத்திகன் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். இலக்கியம், பத்திரிகை, திரைப்படம், அரசியல் என கால் பதித்த அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்த பொதுவுடைமைக் கவிஞரின் உத்வேகமூட்டும் வாழ்க்கை வரலாறு.
Be the first to rate this book.