மரபுக் கவிதையில் மகாகவி பாரதியாரின் பிறப்பு முதல் மரணம் வரை பாடப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாற்றுப் பதிவு, இந்நூல். தியாக காண்டம், யாக காண்டம், யோக காண்டம் ஆகிய மூன்று காண்டங்களாகப் பிரித்துக்கொண்டு இக்காவியத்தைத் தந்திருக்கிறார். பாரதியின் பிறப்பு, அவரது தாய்-தந்தை மரணங்கள், படிப்பு, எட்டயபுரம் அரண்மனையில் "பாரதி' பட்டம் பெறுதல், திருமணம், நின்றுபோன "இந்தியா' பத்திரிகை மீண்டும் வெளிவருதல், பாரதியின் புதுச்சேரி பிரவேசம், அங்கே அரவிந்தரின் வருகை, பாரதிதாசனின் அறிமுகம், சுதேசமித்திரனில் பாரதியார் பணி புரிந்தது, கண்ணன் பாட்டு எழுதியது உட்பட அனைத்தும் மரபுக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கின்றன. நூலாசிரியர் விஞ்ஞானியாக அறியப் படுவதற்கு முன்பாகவே, தான் ஒரு கட்டுரையாளர், சிறுகதைகள்-குறுநாவல்கள் எழுதுபவர் என்று நிரூபித்தவர். அவரின் "பாரதி காவியம்' என்ற இந் நூல் மூலம், சிறந்த கவிஞராகவும் வெளிப்பட்டிருக்கிறார். பாரதி அன்பர்களின் மனதில் இந்நூல் சிறப்பான இடம் பெறும்.
Be the first to rate this book.