இந்திய நாட்டின் விடுதலை எளிதில் கிடைக்கவில்லை; பல தலைவர்களும், தொண்டர்களும் தம் இன்னுயிரை ஈந்து, விடுதலைக்கு வித்திட்டனர். அதில் எட்டுத் தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் கூறுகிறது.
வீரமங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, வீரபாண்டிய கட்டபொம்மன், நேதாஜி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன், பகத்சிங் என்ற விடுதலைத் தியாகிகளின் வரலாற்றைப் படிக்கும்போது, அரும்பாடு பட்டுத் தியாகங்கள் பல புரிந்த அத்தலைவர்களின் மாண்பினை அறிந்து நம்மனம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.
மேற்கண்ட தியாகிகளின் வரலாற்றில் நாம் இதுவரை கேள்விப்படாத புதிய செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, வேலு நாச்சியாரின் தோழி குயிலி பற்றிய செய்தியை கூறலாம். (பக் 30)
தெளிவான அச்சும், தவறில்லாமல் இருப்பதும் நூலிற்கு பெருமை சேர்க்கின்றன. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.