ஆழ்வார்களும் நால்வரும் கம்பரும் பிறரும் போற்றி வளர்த்த தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் பேரழகானவை. கடவுள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அன்பை, அவருடைய பேரரருளை எண்ணிய வியப்பை, உருக்கத்தை, மலைப்பை, அவர் படைத்த உயிர்களின்மீது பேரன்பை, இன்னும் பலப்பல உயர்ந்த உணர்வுகளை எழில்மிகுந்த தமிழில் சுவையாக வழங்கியிருக்கிறார்கள் நம் புலவர்கள். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் இறைவனுக்குச் சூட்டும் ஒரு மலரைப்போல, அவற்றின் தொகுப்பு, இவ்வுலகின் மிகச் சிறந்த பாமாலை.
தமிழின் மிக இனிமையான பக்திப் பாடல்களைத் தொகுத்து விரிவான, தெளிவான விளக்கங்களுடன் வழங்கும் நூல் இது, பக்கத்துக்குப் பக்கம், பாடலுக்குப் பாடல், வரிக்கு வரி மொழி அழகாலும் பக்திச் சிறப்பாலும் உங்களை நெகிழவைக்கும், இறையருளை நினைத்து வணங்கவைக்கும்.
Be the first to rate this book.