வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோதைரியத்தாலும், தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்டமேனும் நஷ்டமேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்துகொண்டே இருக்க வேண்டும். நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டு புண்ணியச் செயல்களையே செய்துகொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கிறார்.
- பாரதியார்
Be the first to rate this book.