கேலியும்,கிண்டலும், துள்ளலான நடையழகும் கொண்ட பெர்னார்ட்ஷாவின் நாடகங்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. அவர் எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்ந்த வாழ்க்கையும் கூட வண்ணமயமானதுதான். உலக இலக்கியத்தின் உச்சம் என்றால், அது நோபல் பரிசுதான். பெர்னாட்ஷா ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளல்களில் ஒருவராக, ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படுபவர். அவரது நாடகங்கள், ஆய்வுப்படைப்புகள், சிந்தனைகள் அனைத்தும், இன்றைய வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்படுபவை. இத்தனைக்கும், பெர்னாட்ஷா எழுதிய விஷயங்கள் ஒவ்வொன்றும், நெருப்புப்போல, வரிக்கு வரி நகைச்சுவை பொங்கும் எழுத்து. ஆனால் சிரித்து முடித்த அடுத்த வினநாடி, அதன் பின்னணியில் இருக்கும் நிஜம் நெஞ்சைச் சுடும். சமூகத்துக்காக ஏதாவது உடனே செய்தாகவேண்டும் என்கிற வேகம் உண்டாகிவிடும். நோபல் பரிசு, ஆஸ்கர் பரிசு இரண்டையும் வென்ற எழுத்தாளர் பெர்னார்ட்ஷா தவிர உலகில் வேறு யாரும் இல்லை. உலகப் புகழ் பெற்ற உன்னதப்படைப்பாளியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை.
- என். ராஜேஷ்வர்.
Be the first to rate this book.