பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது எழுத்துக்களைப் படிப்பது தனிச்சுகம். இந்நூலின் முற்பகுதியில் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த சூழலில் தம் வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள பட்ட கஷ்டங்களையும், பண்ணநேர்ந்த தகிடுதத்தங்களையும் எள்ளலுடன் விபரிக்குமிவர், ஆங்காங்கே பெர்லினின் அழகை யும் பொலிவையும் வனப்பையும் சித்திரமாக வாசகர்முன் விரித்து வைக்கிறார். பிற்பகுதியில் தணிக்கையும் புனைவுமின்றி இவர் காட்டும் பெர்லின் இரவு வாழ்க்கையும் ஜெர்மனியரின் மனோ வியலும் பழக்கவழக்கங்களும் வெளிப்படையான பாலியல் நடத்தைகளும் மூடுண்ட சமூகத்தினராகிய தமிழருக்குக் கலாசார அதிர்ச்சியை உண்டுபண்ணுவன.
Be the first to rate this book.