சோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் ஃபிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் அவர். விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு மாகாணத்தின் அதிபர்... என பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர்.
இடிதாங்கி முதல், மூக்குக் கண்ணாடி வரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் அவருடையதாக இருந்தும் எதற்கும் அவர் காப்புரிமை கோரியதில்லை என்பது மகா ஆச்சரியம்.
ஃபிராங்க்ளின் இல்லாவிட்டால், அமெரிக்காவால் இங்கிலாந்துப் படைகளைத் தோற்கடித்திருக்க முடிந்திருக்காது. அற்புதமான மனிதரின் அசத்தல் வாழ்க்கை வரலாறு.
Be the first to rate this book.