எட்வினே, நீர் பிரியாணி செய்ய எங்கே கத்துக்கிட்டீர்?”
“எங்க அப்பன்கிட்டேதான். இல்லாம வேறே எங்கே? சாட்சாத் வெடியிறைச்சி விந்தாலு தோபியாஸ் பக்கத்திலேயே இருந்துதான். அப்பனுக்கு பிரியாணி செய்யறதோட தியரியும் தெரியாது. பிராக்டிகலும் தெரியாது. ஒரு பாரசீகத்தான் அவருக்கு அதை கத்துக்கொடுத்தான். பிரியாணிக்கு ரெண்டு பாணி உண்டுன்னு அப்பன் சொல்லிக் கேட்டிருக்கேன். முதலாவது வடக்கு பாணி. லக்னோ ஸ்டைல். இறைச்சியும், சோறும் தனித்தனியா வேகவச்சு அசெம்பிள் செய்து தம் வச்சு பிரியாணி செய்யறது. இன்னொண்ணு தெற்கு பாணி. தெற்கிலே நிஜாம் நாடு, ஹைதராபாத் ஸ்டைல். எல்லாத்தையும் அவியல் மாதிரி ஒண்ணாப் போட்டு வேகவிடுவாங்க. நாம இங்கே செய்யறது வடக்கு ஸ்டைல் பிரியாணி.”
மலையாள எழுத்தாளர். 1948-இல் எர்ணாகுளத்தில் பிறந்தார். மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர். இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது. 1970-இல் மாத்ருபூமி பத்திரிகை கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘சிசு’ மூலம் மலையாளத்தில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் என்ற இடத்தைப் பிடித்தார். கேரள மாநில சாகித்ய அகாதமி, ஓடக்குழல் விருதுகள் பெற்றவர். மூன்று முறை சிறந்த சிறுகதைக்கான கதா விருது பெற்றவர்.
Be the first to rate this book.