ஒருவருடைய பயங்கரவாதி மற்றொருவருடைய விடுதலைப் போராளியா? பயங்கரவாதம் என்பது குற்றமா, யுத்தமா? ‘பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்று ஒன்று இருக்குமா? நவீன பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் மூலம் இந்தப் புத்தகம் ஒரு தெளிவான பாதையை வகுத்திருக்கிறது.
பயங்கரவாதிகள் குற்றவாளிகளா? ஊடக விளம்பரம் எந்த அளவுக்குப் பயங்கரவாதத்தை நீடித்திருக்கச் செய்யும்? இவ் விஷயத்தில் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற சிக்கலான கேள்விகளை இப்புத்தகம் விடுவிக்கிறது.
இது மேலும், வரலாற்று ரீதியாகவும் கொள்கைரீதியாகவும், பயங்கரவாத வன்முறையின் பிராந்திய வேர்களையும், அந்தக் காலத்திலிருந்து சமீப காலம்வரை, குறிப்பிட்ட பயங்கரவாத மற்றும் பயங்கரவாத எதிர்ப் பிரச்சாரங்கள் பெற்றிருக்கும் வெற்றியையும் பரிசீலனை செய்கிறது.
Be the first to rate this book.