உடல்மொழிப் புரிதலின் அடிப்படையிலேதான் வாழ்வியல் நகர்கிறது. அந்த வாழ்வியலின் ஒவ்வொரு பக்கமும் பக்குவமாக நகர்த்தப்படும் பட்சத்தில், பிற்காலத்தில் அந்த வாழ்வியல் அர்த்தமுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பக்குவம் எவற்றிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று யோசிக்கும்போது, அது நமது உடலிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். இத்தெளிவு கிடைத்துவிடும் பட்சத்தில், அந்த உடலைச் சுமந்து வாழும் பாலினத்தையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், பழக வேண்டும், முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தெளிவும் புரிதலும் கிட்டிவிடும்.
இக்கருத்தை மையமாக வைத்தே இந்த ‘பயம் கொள்ளலாகாது’ நாவல் படைக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்தில் படிக்கும் கார்முகில் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கலை முன்னிறுத்தி அதனூடே அவளின் குடும்பம், உறவு நிலைகள், குழந்தைகளுக்கே உண்டான மனநிலைகள், அவர்களின் அன்றாடப் பாடுகள், மகிழ்வுகள் எனப் பல தகவல்கள் அவற்றினூடே விரிகின்றன. பாலியல் என்ற பாடுபொருளைச் சொல்லவோ பேசவோ தயங்கக் கூடாது. எந்தவொரு தோல்விக்குப் பின்னாலும் வாழ்க்கை இருக்கிறது. அந்தத் தோல்வி பணமோ, பொருளோ, நகையோ, நட்போ, வேலையோ, படிப்போ, காதலோ உடலியல் சீண்டலோ அஃது எதுவாயினும் அதற்குப் பிறகான வாழ்க்கை இருக்கிறது. பதின்பருவம் மட்டுமல்ல, அதன் பிறகான பருவத்திலும் உடல்மொழியில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் கையாண்டு வாழ முடியும் என்பதே இந்த நாவலின் வழி புலப்படுகிறது.
Be the first to rate this book.