“புத்தர் தம்மை ஒரு அவதாரமாகவோ, கடவுளின் தூதராகவோ, தெய்வப்பிறவியாகவோ, கடவுளாகவோ விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் கூறிக்கொள்ளவில்லை. வேறு எந்தக்கடவுளையும் சுட்டிக்காட்டி வணங்கவோ, வழிபாடு செய்யவோ போதிக்கவில்லை…….”
“......பல இலக்கியங்கள் பல்வேறு மாற்றங்கள் பெற்று குறைத்தும் கூட்டியும் திருத்தியும் எழுதி இடைச்செருகல்களை செய்துள்ளவற்றையும் வாசகரகளும் ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். மயிலை சீனி.வேங்கடசாமியால் குறிப்பிடப்பட்ட கோயில்கள் மட்டுமன்றி இப்பொழுது புகழ்பெற்று விளங்கும் தஞ்சாவூர், சிதம்பரம், தாராசுரம் முதலிய ஊர்களில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும்கூடப் பவுத்த அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.
Be the first to rate this book.