ஒரு ஹைக்கூ நம்பகத் தன்மையை உருவாக்க
வேண்டும். நிகழ்காலத்தில் நின்று பேச வேண்டும்.
நம்பகம் என்பது பூரணமானதைப் பின்பற்ற வேண்டும்
என்ற பொருளைத் தருவது. அது முழுமையானது.
கொடுக்கப்பட்ட வாய்ப்பை அனுபவிக்க வேண்டும். தம்
எண்ணங்களைச் சிதையாமல் வசீகரமான
வார்த்தையாக மாற்றும் வல்லமை வேண்டும். கவிஞர்
இராஜ்குமாரனுக்கு இருக்கிறது.
- கவிஞர் நா. விச்வநாதன்
ஆசையாய் வாங்கிய சட்டை பிறகொரு நாள்
அடுப்படியில் கிடப்பதும், மயிலை விரட்டும் மகனின்
கைகளில் நடவு விதைகள் இருப்பதும், கூட்டைத்
திறந்ததும் பறவைகளுக்கு வானமல்ல. வனம்
வசப்படுவதும், காட்டில் எரியும் செடியிலுள்ள நெருப்பை
ஒற்றைப் பறவை அணைத்துப்போவதும் கவிஞர்
ச.இராஜ்குமாரின் ஹைக்கூ
ஹைக்கூ புரிதலிலும், தொடர் செயலாற்றலிலும்
விளைந்த முத்துக்களென ஒளிர்கின்றன.
- கவிஞர் மு.முருகேஷ்
Be the first to rate this book.