தனது எளிமையான எழுத்துகளின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக விளங்கியவர் வைக்கம் முஹம்மது பஷீர். பஷீரால் எழுதப்பட்ட புத்தகங்களைக் காட்டிலும் அவரைப் பற்றிப் பிறர் எழுதிய புத்தகங்களே அதிகம். இருப்பினும் அவரது முழுமையான வாழ்க்கைக்கதை இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அந்த இழப்பை இப்புத்தகம் ஈடுகட்டுகிறது. கோழிக்கோடு பேப்பூரிலுள்ள ‘வைலால்’ வீட்டில் குடும்பத்தலைவரின் பொறுப்புடன் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கிய பேப்பூர் சுல்தானைக் காட்டிலும் படைப்பூக்கத்துடன் ’தனிமையில் பயணிக்கும் துறவி’ பஷீரே இந்த வாழ்க்கைக்கதையில் மேலோங்கி நிற்கிறார். ஏற்கனவே பஷீரின் கதைகளை வாசித்தவர்களையும் இந்த வாழ்க்கைக்கதை புதியதோர் அகப்பார்வையுடன் மறுவாசிப்புக்கு இட்டுச் செல்லும். இந்நூல் 2011-ம் ஆண்டுக்கான மத்திய சாகித்திய விருது பெற்ற படைப்பாகும்.
Be the first to rate this book.