இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான தலித் மக்களின் வாழ்வியலை எளிமையாக சுட்டிக்காட்டிச் செல்லுகின்றது தயா பவாரின் இச்சுயசரிதை. மராத்தி மொழியின் முதல் தலித் சுயசரிதை என்பது இந்நூலுக்கு கூடுதல் சிறப்பு. ‘தலித்’ வார்த்தை வந்த விதத்தையும் இது விளக்குகிறது. இந்நூல் வெளிவந்த காலகட்டத்தோடு ஒப்பிடும்பொழுது சாதியம் இன்று அதன் பரிணாமங்களை அடைந்துள்ளதே ஒழிய, எப்பொழுதும் போன்ற ஊர் சேரி பிரிவினைகளும், சாதியப்பாகுபாடுகளும் அதன் பொருளில் எவ்விதத்திலும் மாறுதலடையாமல் அப்படியே இருக்கின்றன.
Be the first to rate this book.