டி. பாலசரஸ்வதியின் (1918-1984) முழுமையான முதல் வாழ்க்கை வரலாறு இது. தென்னிந்தியாவைச்சேர்ந்த இசை மற்றும் நடனக் கலைஞரான இவர், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக்கலைஞர்களில் ஒருவராக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டவர். இந்தியாவில் தான் வாழ்ந்த காலத்திலேயே இவர் காவிய அந்தஸ்தைப் பெற்றிருந்தார். முப்பது வயதிற்குள்ளாகவே மரபுசார் பரதநாட்டியத்தின் மிக முக்கியமான கலைஞர் எனப் பெயர்பெற்றார். பாலசரஸ்வதி தன் கலையின்பால் பேராவல் கொண்ட கலகக்காரர். முற்றிலுமாக நவீனக் கலைஞர். அவரது சமகாலத்தில் இந்தியாவிலும் மேற்குலகிலும் இருந்த மிக முக்கியமான நடனக் கலைஞர்கள் சிலர் அவரது தாக்கத்தின் வலிமையைப் பறைசாற்றினார்கள். அவரது கலையும் வாழ்வும் ஒரு மரபின் இதயத்தை வரையறுத்தன.
Be the first to rate this book.