பாலகுமாரனின் தத்துவங்கள் நிறைந்த பதில்கள் பேரமைதியை நம்மீது கவிழச் செய்பவை. அகந்தையை கூறுபோட்டு அறுப்பவை. சிலது சாட்டையாக இருக்கும். அம்மாதிரியான பதில்கள் அகந்தையை ஒரு மூலைக்கு நகர்த்தி... நகர்த்தி... ஒரே வெட்டாக வெட்டும்படி இருக்கும். பாலகுமாரன் ஒருகாலும் அகந்தையை தடவித் தடவி வளர்த்ததில்லை. அதில் அவர் கசாப்புக் கடைக்காரனைவிட வேகமானவர். ஈவு இரக்கமற்றவர் என்பதை அருகிலிருப்போர் உணர்ந்திருப்பார். இவ்வளவு தூரம் என் எழுத்தை புகழ்கிறாயே' என்று இம்மியளவும் பச்சாதாபம் காட்டமாட்டார் - காரத்தோடு இருந்தால், திரிந்தால் 'நான்' எனும் அகந்தையை வேரோடு அசைத்துப் பார்க்கவும் தயங்க மாட்டார். வார்த்தைகளை சீவியெடுத்து விளாறுவார். ஏற்றுக் கொண்டால் மேலே நகரலாம். அவரிடமிருந்து நகர்ந்து கொண்டால் நஷ்டம் நமக்குத்தான். அன்பையும் அகங்காரம் அறுத்தலையும் ஒரே நேர்க்கோட்டில் நிகழ்த்து வதை பொறுமையோடு பக்கத்தில் இருந்தால் பார்க்கலாம்
Be the first to rate this book.