என் செண்பகம் வாழ்ந்த காலத்தில் அவர் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கும் ‘மனிதர்கள் நல்லவர்கள்; ஆனால் பாவமானவர்கள்’ என்பதன் பொருள் முன்னைவிடவும் இப்பொழுதுதான் எனக்குப் புரியவே தொடங்குகிறது. இந்தப் புரிதலின் தமிழ்ப் பல்கலைக்கழகக் காலத்தில் இங்குமங்குமாய் நான் பெற்ற அனுபவங்கள் எனக்குள் மூச்சுக் காற்றாய் நிறைந்து, உள்ளுக்குள் உண்மையாய்க் கதைகளைப் பேசிக்கொண்டே இருக்கும் என் செண்பகத்தைப் போல, எப்போதைக்கும்! நம் செயல்பாடுகள் மட்டுமே நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் என்பதே இந்த வாழ்க்கை எனக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். உண்மையாய்ச் செயல்படுவார்கள். பூமிப்பந்தில் என்றாவது எங்காவது ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை, காற்றைப் போல, கதிரைப் போல், தாமிரபரணி ஆற்றைப் போல், என் சென்பகத்தின் நினைவுகளைப் போல் என் நெஞ்சுக்குள்ளேயே சுவாசமாய்க் கலந்து என்னை இயங்கிக் கொண்டுருக்கிறது.
Be the first to rate this book.