"எப்படி தனியா ரொம்ப தூரம் ட்ராவல் பண்றீங்க?" தனிப்பயணியான நான் அதிகம் எதிர்கொண்ட கேள்வி இது. நம் எல்லோருக்குள்ளும் தனிமை மீதான பேரச்சம் இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஆனால், பயணங்களில் நாம் தனியாக இல்லை. இதனைச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கோடுதான் வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்ட நெடும்பயண அனுபவத்தை 'Back பேக்' என்கிற தொடராக விகடன் வலைதளத்தில் எழுதினேன். 25 அத்தியாயங்கள் வெளிவந்த இத்தொடர் தனியாகப் பயணம் செய்ய ஊக்குவிப்பதாக இருக்கிறது எனவும், உடன் பயணம் செய்த உணர்வைத் தருகிறது எனவும் பொது வாசகர்கள் கருத்திட்டிருந்தனர். எந்த நோக்கத்துக்காக எழுதினேனோ அதற்கான பலன் கிடைத்தது பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. பயணத்தின் வழியே எதனைக் கண்டடைந்தாய் எனக்கேட்பின் நம் அகங்காரத்தை நசுக்கும் இயற்கையின் பேராற்றலையும், உன்னதம் மிக்க சில மானுடத்தருணங்களையும்தான் என்பேன்.
Be the first to rate this book.