அம்பேத்கருக்கு விரிவானதொரு வாழ்கைக்குறிப்பு இல்லாத குறையை இந்நூல் போக்குகிறது.அவருடன் இருந்த,பழகிய,பார்த்த,அறிந்த இருபத்தோரு மனிதர்களின் மிக நேர்த்தியானதும் உண்மையானதுமான குறிப்புகள் இவை.இக்குறிப்புகளின் வழியே கடும் நெஞ்சுரம் மிக்கவராக,சளைக்காத உழைப்பாளியாக,ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையையே எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தவராக,பெரும் படிப்பாளியாக,நூல்களின் வெறியராக,அறிவு மேதமையோடும் சமரசமில்லாத கொள்கையோடும் சக தோழர்களை கடிந்துகொள்கின்றவராக,மனைவியை நினைத்து ஏங்கியழும் காதலராக,குறும்பு மிளிரும் நகைச்சுவை உணர்வு கொண்டவராக என்று நமது முந்தைய நினைவுகளின் மீது அடுக்கடுக்காக,புதியவராகப் படிகின்றார்.இடியும் புயலுமாக ஓவென்று கொட்டும் மழையின் ஊடே அவர் காற்றில் பரவவிடும் வயலின் இசை எல்லாருக்குமானதாக தழுவிச்செல்கிறது.
- அழகிய பெரியவன், எழுத்தாளர்
Be the first to rate this book.