பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் இவ்விவாதம் நடைபெற்ற காலத்தில் இன்றிருக்கும் பல செய்தி தொலைக்காட்சிகள் பிறக்கவே இல்லை. சன் நியூஸ் தொலைக்காட்சியில் மட்டும் வாரம் ஒரு நாள் “நேருக்கு நேர்” என்ற அரசியல் விவாத நிகழ்ச்சி நடைபெறும். அதை நாடறிந்த மூத்த ஊடகவியலாளரும், இலக்கியப் படைப்பாளருமான திரு. வீரபாண்டியன் நெறியாளுகை செய்தார்.
இத்தகைய காலத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி யார் பக்கம் என்ற தெலைப்பில் தமுமுகவின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஆர்எஸ்எஸ்ஸின் தென்பகுதி செயலாளராக இருந்த சண்முகநாதன் அவர்களும் சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நடத்திய விவாதம் பெரும் வரவேற்பை பெற்றது.
இவ்விவாதம் குறித்து அக்காலத்தில் துக்ளக் வார இதழ் வாணியம்பாடி பேராசிரியர் (தமுமுகவின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லா) மிகச்சிறப்பாக ஹோம் ஒர்க் செய்து வந்துவிட்டார் என்று பாராட்டி எழுதியது குறிப்பிடத்தக்கது.
அன்று நடந்த விவாதத்தில் இன்றைக்கும் தேவையான செய்திகள் அடங்கியிருப்பதால் இதை எழுத்தாக்கம் செய்து வழங்குகிறோம்.
Be the first to rate this book.