அழுகணிச் சித்தரால் அருளப்பட்ட, 'கண்ணம்மா' என்னும் சொல்லைப் பாரதி பயன்படுத்திய அர்த்தத்தில் வேறு எவரும் அதே அழகுடனும், செறிவுடனும் கையாண்டதாகத் தெரியவில்லை. ஆண்டாளும் மாணிக்கவாசகரும் ஏற்படுத்திய மரபின் தொடர்ச்சியைப் பாரதியே ஆகச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார்.
காதலுக்கும் காமத்திற்கும் இடையேயுள்ள சின்னப் புள்ளியில் கவிதைகளைக் கொண்டு செலுத்திய அரிய வித்தை அவனுடையது. ஒரே ஒரு கண்ணம்மா எத்தனை ரூபங்களில் தெரிகிறாள் என்பதற்குக் கணக்கில்லை. இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளும் அப்படியே.
இக்கவிதைகளில் இடம்பெற்றுள்ள கண்ணம்மாவை உங்கள் ஊகத்திற்கு எட்டிய தத்துவங்களுடனும், பெண்களுடனும் இணைத்துக் கொள்ளலாம். எந்த நிபந்தனையுமில்லாமல் தம் போக்கில் நகரும் வாக்கியங்களை அவரவர்க்கு உண்டான அர்த்தங்களுடன் பொருத்திக் கொள்ளலாம்.
கேள்விகள் என்னுடையவை. எனினும், பதில்களை நீங்களே தேடிக்கொள்ளலாம். மேலதிக விவாதங்களை அமைத்துக்கொள்வதும் கூட உங்களுடைய விருப்பத்திற்குட்பட்டது. உங்களுடன் பகிர நினைத்த இவ்வுணர்வுகள், நேர்மறையானவை.
Be the first to rate this book.