குழந்தைகளோ அல்லது ஆபத்தில் சிக்கியவரோ மட்டுமே அழுவார்கள் என்றொரு புரிதல் நமக்குண்டு. அதற்கு உடலின் வேதனை அல்லது மன வேதனையைக் காரணமாகச் சொல்வோம். ஆனால், நம்மைப் படைத்தவனின் விசாரணைக்கு அஞ்சியோ, அவனது அன்பில் உருகியோ அழுவதை எத்தனை தடவை அனுபவித்துள்ளோம்? இதற்காக நமது கண்களிடம் குறைபட்டுக்கொள்ள முடியாது. ஏனெனில், அழுகை நமக்குள் உற்பத்தியாகும் இடம் கண்களல்ல; இதயம். நமது இதயத்தை நாமே குறைபட்டுக்கொள்வது மிகவும் தேவையானது. நமது மொத்த உணர்ச்சிகளும் உறுப்புகளும் இதயத்துடன் முடிச்சு போட்டு இணைக்கப்பட்டுள்ளன. இதனோடு அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும் அன்பையும் இணைத்துக்கொள்கிற வழிகளைச் சொல்கிறது ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷாவின் இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.