ஒரு பேரபாயம் உலகைத் தாக்குகிறது. கடலில் அமைதியாக மிதந்து செல்லும் கப்பல்களெல்லாம் திடீர், திடீரென்று தாக்கப்படுகின்றன. என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை ஒருவராலும் கண்டறியமுடியவில்லை. கடலுக்கு அடியில் ஏதோ ஒரு பெரிய மர்மம் புதையுண்டு கிடக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அந்த மர்மத்தை எப்படிக் கண்டறிவது? ஒருவேளை ஏதேனும் மர்ம உயிர் கீழே வாழ்ந்துகொண்டிருக்கிறதோ? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? ஆழ்கடலுக்குள் யார் சென்று தேடுவது?
நம் இதயத்தை நிரந்தரமாக ஆக்கிரமித்து மகிழ்விக்கப்போகும் அட்டகாசமான சாகசக் கதை இந்நாவல். வெறும் சாகசத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் துல்லியமான அறிவியல், புவியியல் தகவல்களோடு சேர்த்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார் அறிவியல் புனைக்கதையின் தந்தை ஜூல் வேர்ன்.
20,000 Leagues Under the Sea, Journey to the Center of the Earth, Around the World in 80 Days உள்ளிட்ட இவருடைய பல விஞ்ஞானப் புனைவு நாவல்கள் திரைப்படங்களாகவும் தொலைகாட்சித் தொடராகவும் வெளியாகி உலக அளவில் இன்றும் பெருமளவில் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
ஆழ் கடலியல், புவியியல், கடல் பயண நுட்பங்கள், கப்பல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகள் சார்ந்த கலைக்களஞ்சியமாகத் திகழும் இந்த நாவலை மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார் விஜயஸ்ரீ. .
குழந்தைகளுக்கான அறிவார்ந்த, சாகஸ நாவல்களின் பட்டியலிலும் இது முக்கிய இடம் பிடிக்கும்.
Be the first to rate this book.