சுதா மூர்த்தியின் 200வது புத்தகம் இது.
என் நண்பர்களின் கதைகளாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்தின், தெரிந்தவர்களின் கதைகளாக இருந்தாலும் சரி, என்னுடைய கதைகளில் நான் வியாபித்து இருப்பேன். ஏனென்றால் அதை அனுபவம் செய்தவள் என்ற முறையில் என்னை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எனக்குப் பிடித்த அழகான மலர்களைப் போல் இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் நான் மிகவும் போற்றும் அனுபவங்கள். இவை எல்லாவற்றையும் தொடுத்து ஒரு மாலையாக இங்கு கொடுத்திருக்கிறேன்.
சுதா மூர்த்தி கர்நாடக மாநிலத்தின் வடபகுதியிலுள்ள ஷிகாவுன் என்ற ஊரில் 1950ம் ஆண்டு பிறந்தார். அவர் கணினி அறிவியலில் எம்.டெக் படித்துள்ளார். அவர் தற்போது இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் எழுதியுள்ள புதினங்கள், சிறுகதைகள், சிறுவர் கதைகள், பயணக் கட்டுரைகள், மற்றும் இதரக் கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அவருடைய புத்தகங்கள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளில், இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஆர்.கே. நாராயண் விருது (2006), பத்மஸ்ரீ விருது (2006), கர்நாடக அரசால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற அட்டிமாபே விருது (2011) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
Be the first to rate this book.