இந்த நூலை வாசிக்கும்போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனிதத் தலையீட்டால் எப்படிச் சிதைந்தது என்கிற சோகக் காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பலமுறை கடந்தபோதும் அம்மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை. ஆங்கிலேயர்கள் கண்களில் பட்டபோதுதான் இத்தீவுகள் குரங்கு கை பூமாலையாக மாறின என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றிப் பார்த்த அனுபவமும் அவற்ரின் இயல்புத்தன்மை மீளப்பெற வேண்டும் என்கிற அக்கறையும் இதை வாசித்து முடித்ததும் ஒருசேர எழுகின்றன. இந்நூல் சுற்றுச்சூழல் நுண்ணுறிவில் ஒரு மைல் கல். நூலாசிரியர்களின் கடின உழைப்பையும், சமூக அக்கறையையும், பூர்வகுடியினர் மீது உள்ள பரிவையும் இந்தில் தரிசிக்க முடிகிறது.
- வெ. இறையன்பு
Be the first to rate this book.