சாதிகள் ஒழிய வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டிற்காக சாதிகள் தொடர வேண்டும் என்ற முரண்பட்ட வாதத்திற்கு வலுவாகக் கூறப்படும் ஒரே காரணம், ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சாதியின் அடிப்படையில் கல்வியுரிமை மறுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் முன்னேற வேண்டும். ஆகவே, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே.
உண்மையில் பண்டைய பாரதத்தில் சாதிகளின் அடிப்படையில்தான் மக்களுக்குக் கல்வியறிவு வழங்கப்பட்டதா? குறிப்பிட்ட மேல்சாதியினர் மட்டுமே கல்வி கற்றார்களா? கல்வியைக் கற்றுக் கொள்ளும் உரிமை சிறுபான்மையினர்களுக்கு மறுக்கப்பட்டதா? கல்விச் சாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் பாடத்திட்டங்கள் எப்படியிருந்தன- என்ற பல கேள்விகளுக்கு விடைதேடும் விதமாக ஆராய்ச்சி மனநிலையில் எழுதப்பட்ட நூல் ‘அழகிய மரம்’. காந்திய சிந்தனையாளரான தரம்பால் அவர்கள், ஆங்கிலத்தில் ‘The Beautiful Tree’ என்று எழுதிய நூலை தமிழில் பி.ஆர்.மஹாதேவன் அவர்கள் ‘அழகிய மரம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளார். இந்நூலிற்கான தலைப்பை காந்தியடிகள் எழுதிய குறிப்பிலிருந்து தேர்வு செய்துள்ளனர்.
18-ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை ஆராயும் இந்நூல், மேற்கண்ட வினாக்களுக்கு தக்க ஆதாரங்களுடனும், குறிப்புகளுடனும் விரிவான விடைகளை அளிக்கின்றது.
Be the first to rate this book.