எல்லோருக்குமான கதைகள்தான் எனக்கும். பிரத்யேகமாய் ஒன்றுமில்லை. ஆனால் சொல்முறையில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு உண்டு. புரிவதுபோல் எழுதிவிட்டால் வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய். வார்த்தைகளை மாற்று. குழப்பியடி. ஜனரஞ்சகம் என்பது கெட்ட வார்த்தை. இலக்கியத்தில் ஒரு பீடம் வேண்டுமென்றால் அடித்துப் புடை. இறுக்கமாக்கு. ஊளைச் சதை உதவாது என்பன போன்ற இன்ன பிற கருத்தாக்கத்தை மனதில் வைத்து, எழுத்தை இம்சிப்பதில்லை. எது வருகிறதோ அதை எழுதுகிறேன்.
- எழில்வரதன்
Be the first to rate this book.