சிவகுமார் முத்தய்யாவின் கதைகள், வெவ்வேறு களங்களில் உள்ள விளிம்பு நிலை வாழ்வை, அதன் நிச்சயமின்மையைப் பேசும் பொதுத்தன்மையை உடையவை. நாம் பார்க்கின்ற மத்தியதர வாழ்க்கையோ அதன் விழுமியங்களோ தேவையற்ற அதன் வரம்புகளைத் தாண்டிய வாழ்வில் இருந்தும் பேசுகின்ற கதைகள் அவை. எத்தனை தீமையான /அசுத்தமான / சட்டத்திற்குப் புறம்பான/ சமூகத்தின் நீரோட்டத்திற்கு எதிர் திசையில் பயணிக்கும் பாத்திரங்கள் வந்தாலும் அவர்களின் வெகுயியல்பில் வெளிப்படும் அறம் அபூர்வமானது. அழகிகள் மண்டபம் உள்ளிட்ட இவரது பிற கதைகளின் அடிநாதமும் இதுவே.
Be the first to rate this book.