தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்ட வட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம்காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுப்பபட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீக கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார். இவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
Be the first to rate this book.