சங்கரநாராயணின் மொழிபெயர்ப்புகள் காத்திரமானவை. தனித்துவம் மிக்கவை. சங்கரநாராயணன், சொல் சொல்லாக வறட்டாக மொழிபெயர்க்கும் தன்மையின்றி, மிரட்சியிம் அயர்சி யும் ஏற்படுத்தாது கதையின் ஜீவனை வெளிப்படுத்தும் வகையில் எளிமையுடன் மொழிபெயர்ப்பவர். அவரின் மொழிபெயர்ப்புக் கதைகளுக்குள் உள் நுழையும் வாசகன் நூலின் முதல் வரியிலிருந்தே தன்னை அக்கதையோடும் அதன் நிகழ்விடத்தோடும் ஒன்றிக்கொண்டு விடமுடியும். அயல்வெளி தொகுப்பில் மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகள் உள்ளன.உருகுவே, நைஜீரியா, அமெரிக்கா, போலந்து, துருக்கி, அயர்லாந்து, கனடா, ஸ்பெயின், குவைத் தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. எல்லாம் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களான, சீமாமந்தா, மார்க்வெஸ். ஹியுக்ஸ், ஆலிஸ் மன்ரோ போன்றோரின் கதைகள். உலக இலக்கியம் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு ‘அயல்வெளி’ மிகச்சிறந்த நூலாகும்.
Be the first to rate this book.