ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன. அந்த வெளிப்பாட்டின் இன்னொரு பரிமாணமாக இந்தக் கவிதைகளைப் பார்க்க முடிகிறது. வழமையான ஆண் மொழியிலிருந்து, அழகியலில் இருந்து விடுபட்டு எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இவை. பெண்ணை தோழியாய், சக பயணியாய் புரிந்து கொள்ள வேண்டும் கவிதைகள் இவை. இதன் வரிகளில் இழையோடும் மென்மை ஒரு பூ மலர்வதைப் போல் விரிந்து, அதன் ரகசிய அறைகளை, அடுத்த தலைமுறைக்கான விதைகளை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறது.
- கனிமொழி
Be the first to rate this book.