மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள்.
இன்னொரு விதமாகச் சொன்னால், நனவிலியின் கனவுகளை உணர்வுநிலையின் வழியாகக் காட்ட முயல்பவர் ஒருவர். மற்றவர், உணர்வுநிலையின் ததும்பல்களை, நனவிலியின் குழந்தைகளாகக் காட்ட முயல்பவர். அதற்குத் தங்களது தனித்துவமான தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
தேவதச்சன் எடுத்துவைக்கும் புலனுலகம், கவிதைக்கு வெளியில் இருக்கும் விதமாகவே கவிதைக்குள்ளும் இருக்கிறது தேவதச்சனின் உருவகங்கள் படிமங்களாக மாற்றம்கொள்வதும், ஆனந்துடையவை பலவும் உருவகங்களாகவே மீந்துவிடுவதும் கவிதையியல் வேறுபாடுகள் மட்டுமே அல்ல இருவருடைய பார்வைக் கோணங்கள் வித்தியாசப்படும் எல்லைகளும்தாம்.
Be the first to rate this book.