ரமேஷ் பிரேதன் அவன் பெயர் சொல் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இல்லை, நாவலை சாக்காகக் கொண்டு தன் மனச்சுமைகளை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். எழுதி முடித்தபிறகு எழுத்தாளன் கொள்கின்ற ஆசுவாசம்தான் முக்கியமானது. அதற்கு ஈடுசொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. அது விலைமதிப்பற்றது. அபூர்வமானது. எழுத்தை தவமாகச் செய்கின்ற எழுத்தாளன் எவனொருவனும் அந்தக் குறைந்தபட்ச ஆசுவாசத்திற்காகவே எழுதுகிறான் என நான் கருதுவதுண்டு. அதுவொரு விடுதலை. அவ்விடுதலையை இந்நாவலை எழுதியதின் மூலம் ரமேஷ்பிரேதன் ஓரளவேனும் பெற்றிருக்க வேண்டும்.
- கீரனூர் ஜாகிர் ராஜா
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.