முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தது. தங்களுக்குள் தாங்களே மோதிக்கொண்ட சம்பவங்களில் இன்றும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டே காலத்தைக் கழிப்பவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஈழ விடுதலை அமைப்புகளில் என் கை சுத்தமானது என்று ஒருவர் கூட கையை உயர்த்த முடியாது. அத்தனை கைகளுமே இரத்தக்கறை படிந்தவைதான். வேண்டுமானால் யாருடைய கையில் அதிகம் கறை, யாருடைய கையில் குறைந்த கறை என்று பட்டிமன்றம் நடத்தலாம்.
முப்பது வருட காலத்து யுத்தக்கால சம்பவங்களின் நியாபக மடிப்புகளிலிருந்து மீட்டெடுத்து அதில் ஒரு தொகுதியை மட்டுமே புனைவு கலந்து கதையை சுவாரசியமாக நகர்த்துவதற்காக பெயரில்லாத ஒருவன் மூலமாக 'அவன்’ என்கிற அடைமொழியொடு வெளிவந்த 'ஆயுத எழுத்து' நாவல் வெளிவந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவரை பலரும் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
Be the first to rate this book.