கடலுக்குள் தூக்கி எறிந்த கல் போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்துவிழுந்த சொற்கள் அனைத்தும் கதைகளாக வடிவெடுக்கின்றன.யார் யார் வந்து கற்களை எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எனக்குள் எந்தச் சுவடுகளும் இல்லை. குவியல் குவியலாய் நிரம்பிக் கிடக்கும் அவற்றுள் ஏதோ ஒன்றை நீங்கள் கதைகளாக வாசித்து, கன்னங்களில் ஒற்றி இதமாய்க் குளிர்வதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அவை முற்றிலும் வெளிச்சொல்லாத காயங்களோடும் சேர்த்துப் புனையப்பட்டவை. புனைவின் ரகசியத்தை மூச்சு தீர்ந்துபோனாலும் நான் யாருக்கும் அறிவிப்பதாக இல்லை. கதைகள் வாழட்டும்.
Be the first to rate this book.