பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு.
உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெறும் இச்சையாக அல்லாமல் விடுதலைக்கான வேட்கையாகவும் இவை நிறுவுகின்றன. ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பெண்ணிருப்பின் சீற்றத்தையும் தவிப்பையும் குமுறலையும் மகிழ்வையும் பகிரங்கப் படுத்துகின்றன இக் கவிதைகள்.
- கவிஞர் சுகுமாரன்
Be the first to rate this book.