பெண்ணியம், உண்மையில் பெண்களுக்கு முழுமையான விடுதலையைத் தரவில்லை என்பதை இன்றைக்குப் பெண்ணியவாதிகளே உணர்ந்து கொண்டார்கள். தாம் உருவாக்கிய கோட்பாட்டைத் தாமே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வேறொரு திசையில் பெண்ணியத்துக்கு விளக்கம் தேடும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இஸ்லாம் கூறும் பெண்ணியம் தகத்தகாயப் பேரொளியுடன் வருகிறது. அமெரிக்காவில் முதல் பெண்ணியக் குரல் எழுந்தது 1848 இல்தான்! ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன்! ஆம் பெண்ணியல் நோக்கில், பெண்ணியல்பு நோக்கில் அவளுக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் இறைவன் வழங்கினான். அந்த உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராடாமலே பெண் இனத்துக்குக் கிடைத்த பெரும் புதையல் அது!
நாடறிந்த நல்லிணக்கச் சிந்தனையாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் காலம் கருதி இந்த நூலை இயற்றித் தந்துள்ளார்.
Be the first to rate this book.