லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிஞ்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் வரைகலைத் தொழில்நுட்பக் கலைஞரான இவர் தற்போது
திரைப்பட இயக்கம் சார்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். நடுநாட்டின் சமூக வாழ்வியலைத் தமிழ்த் திரைப்படக் கலைக்குள் பிரதிபலிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இவருடைய முதல் தொகுப்பு "கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கிறேன் " இதில் தன்னை பாதித்த, தனக்குத் தோன்றிய தான் கேள்விப்பட்ட செய்திகளை கவிதை மொழியில் சொல்லியிருக்கிறார்.
இவரது இரண்டாம் தொகுப்பு " ஐந்தாம் திசை" இத்தொகுப்பில் பெரும்பாலான இருண்மைக் கவிதைகளைத் தொகுப்பாக்கி இருக்கிறார். இவை இரண்டும் காளான் பதிப்பகம் வெளியிட்டது.
இவரின் மூன்றாவது தொகுப்பான " மரணக்குறிப்புகள்" காலக்ரமம் வெளியீடாக வந்திருக்கிறது. இதில் இதுவரை பேசப்படாத பக்கங்களை எழுதித் தீர்த்திருக்கிறார்..
இவரது நான்காவது தொகுப்பு "அவள் நாம சங்கீர்த்தனம்" இந்தத் தொகுப்பில் உள்ள 26 நீள் கவிதைகள் ஆண் பெண் மன உளவியலை, தீராக் காதலை, முடிவில்லாக் காமத்தை மொத்தமாகப் பேசியிருக்கின்றன. இதைக் கடல் பதிப்பகம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Be the first to rate this book.